மும்பை அந்தேரி பகுதியில் பூஜா ஷா (29) என்ற பெண் வசித்து வருகிறார்.இவர் கடந்த 23ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் உணவு டெலிவரி ஆப்பில் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பணப்பரிவர்த்தனை தோல்வி அடைந்தது. இதனால் பூஜா சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணை கண்டுபிடித்து போன் செய்து தொடர்பு கொண்டார். பண பரிவர்த்தனை ஆகவில்லை என்று கடைக்காரரிடம் கூறிய நிலையில் பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் கார்டு மற்றும் ஓடிபி விவரங்களை பெற்றுள்ளார்.
பூஜா தனது விவரங்களை கொடுத்து அடுத்த நொடியில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2.4 லட்சம் எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது. தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பூஜா உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் அந்த பணத்தை அப்படியே தடுத்து மீட்டனர். மேலும் இது போன்ற மோசடி சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.