Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. ஆதாரில் ஒரே ஒரு மாற்றம்…. நிலம் அபகரிப்பு மன்னன்…. பகீர் சம்பவம்…..!!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அண்ணா வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கண்ணன்(45) இவருக்கு வீரப்பன் சத்திரம் பகுதியில் ரூ.20 லட்சம் வரை மதிப்பில் 788.5 சென்ட் இடம் உள்ளது. அந்த நிலத்திற்கான சொத்து வில்லங்கம் சான்றிணை கண்ணன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைனில் பார்த்து உள்ளார். அப்போது மூர்த்தி என்பவர் அந்த சொத்தினை சித்தையன், சந்திரகலா என்பவருக்கு விற்பனை செய்து இருப்பதாக தெரியவந்தது. உடனே கண்ணன் இது குறித்து கடந்து 2021 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகார் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டது. அதனை இந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், சொத்து உரிமையாளரான கண்ணனின் சகோதரர் மயமாகி 18 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதனை அறிந்த ஈரோடு கருங்கல்பாளையம் சகன் வீதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஆதார் கார்டில் அவரின் தந்தை பெயரை துரைசாமி என திருத்தம் செய்து போலி ஆதார்கார்டு தயாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் கடந்து 2020 ஆம் ஆண்டு ஈரோடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் சித்தையன் மற்றும் சந்திரகலாவிற்கு கண்ணனின் நிலத்தை விற்பனை செய்வதாக கிரயம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து மூர்த்தியை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் எஸ்ஐ பச்சமுத்து தலமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |