டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவிவருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது.
மேலும் இந்த கொசுக்கள் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23 பேர் இந்த ஆண்டு டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே டெங்குவால் மரணமடைந்தனர். இந்த ஆண்டு டெங்கு மரணம் 23-ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று கடந்த ஆண்டு 1,072 ஆக இருந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு 9,545 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெங்கு பாதிப்பும் மரணமும் அந்த மாநில சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.