Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்பதால், அம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோடைக்காலத்தையொட்டி பெரும்பாலான இடங்களில் வெப்பம் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த 5 நாட்களில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவிலும், அடுத்த 3 நாட்களில் கிழக்கு இந்தியாவிலும் கடுமையான அனல் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை வடகிழக்கு இந்தியாவில் தொடர வாய்ப்புள்ளது. மேலும் பஞ்சாப், ஹரியானா-சண்டிகர்-டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி புழுதிப்புயல் வீசக்கூடும்” என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Categories

Tech |