Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த லாக்டவுன்…? மாவட்டங்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் தனிமைப்படுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும் முகக்கவசம் அணிவதிலிருந்து கூட விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்கள் நீட்டிப்பதற்குள் புதிய வகை  கொரோனா  குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான்  வைரஸ் திரிபான XE  என்னும் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது.

200 நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இந்த தொற்றுக்கு  ஆளாகியுள்ள முதல் நபர் இவர்தான் என அறிவித்துள்ள மும்பை மாநகராட்சி தொற்று  கண்டறியப்பட்டுள்ள நபர்  தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இதனை மறுத்துள்ளது. இது ஒரு புறமிருக்க சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.

ஹாங்காங் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் 40,000 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவ மனையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் எந்த மூலையில் கொரோனா தொற்று  அதிகரித்தாலும் அதன் தாக்கம் அடுத்த சில வாரங்களில் பிற நாடுகளில் பிரதிபலிப்பதால் அண்டை நாடான சீனாவில் அதிகரிக்கும் கொரோனா  இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 20 பேர் இருந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை சற்று உயர தொடங்கியுள்ளது.

மேலும் கொரோனா  பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற இலக்கை எட்டுவதற்கு பதிலாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. முகக்கவசம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடிப்பது  போன்ற நடைமுறைகள் தற்போது வரை தொடர்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது வரை இருந்து வருவதால் மேற்கண்ட நடைமுறைகளை  பொதுமக்கள் பின்பற்றுவதை  உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்,கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில்இருந்தவர்கள்  போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |