உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்துள்ளது.
உலகில் உள்ள பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்துதலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. மேலும் இது குறித்து அவசர குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 உறுப்பினர்கள், 6 ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது. தற்போது உலகில் உள்ள நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவுகிறது.
இதனால் சில நாடுகள் சரிவை சந்தித்து வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது என கூறியுள்ளார்.