வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய தொகுப்பு
நாம் உணவு வகைகளை பரவலாக பயன்படுத்தும் ஒன்று வேர்க்கடலை. மலிவாக கிடைக்கும் வேர்க்கடலை பருப்பு வகையைச் சார்ந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு பசியை சமாளிக்க உடனடி ஆற்றலாக அமைவது வேர்க்கடலையில் செய்யும் சிற்றுண்டி. வேர்க்கடலைகளில் பயோட்டின், தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. வேர்கடலை மட்டுமல்லாது அதன் தோலிலும் கலோரிகள் அதிகம் இருக்கின்றன.
ஒரு கப் வேர்க்கடலை சாப்பிட்டால் உடலுக்கு 830 கலோரிகள் கிடைக்கப்பெறும். நமது உணவில் போதுமான புரதச்சத்து இல்லாததன் காரணமாகவே முடி வளர்வது குறைகிறது. முடி உதிர்வதும் தொடங்குகிறது. ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் இந்த முடி பிரச்சனையை தடுக்க தொடர்ந்து வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் போதும். அதிலிருக்கும் பயோட்டின் முடி உதிர்வதை குறைத்து வழுக்கை ஏற்படுவதையும் தடுக்கிறது. ஆனால் அதே நேரம் அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆன்டி நியூட்டன் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி விடும்.
உப்பு சேர்க்கப்பட்ட வேர்க்கடலையும் வறுத்த வேர்க்கடலையும் தவிர்த்தால் நல்லது. அந்த கடலைகளை அதிகம் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும். வேர்க்கடலை சாப்பிடுவதனால் ஏற்படும் அறிகுறிகள் மயக்கம், மூச்சு விட சிரமம், சிறிய தடிப்புகள், தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், உடல் அரிப்பு, முகம் கைகால் மூட்டுகள் வீக்கம், படபடப்பு அதிகரிக்கும், குழப்பம் ஏற்படும்.
அளவுக்கு அதிகமாக வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
அதிகம் கடலையை சாப்பிட்டால் உணவின் அளவு குறைந்து விடும் இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
வறுத்த கடலை சாப்பிடுவதால் 166 கலோரிகளும் எண்ணெயில் வறுத்த கடலை சாப்பிட்டால் 170 கலோரிகளும் கிடைக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
கடலையில் அதிக புரோட்டின் அளவு இருந்தாலும் கார்போஹைட்ரேட் அதில் அடங்கியுள்ளது.
டயட்டில் இருப்பவர்கள் சரியான அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேர்கடலை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படும்.