தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் தென் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை அதிகபட்சமாக துறைமுகம் பகுதியில் 126 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் திருச்செந்தூர், உடன்குடி மற்றும் சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மிக கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது எச்சரிக்கையாக ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.