Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! பிரிட்டன் நாட்டில் கடும்… வானிலை எச்சரிக்கை .!!

பிரிட்டனில் இந்த வார கடைசியில் சஹாரா பாலைவனத்திலிருந்து  தூசி காற்று வீசும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது .

பிரிட்டன் நாடு பிப்ரவரி மாதம் ஆரம்பத்திலிருந்தே அதிகபட்சமாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. இதனால் அங்கு குளிர்காலத்தில் கடுமையான பணியாக இருந்தது. இந்நிலையில் தற்போது குளிர்காலம் நிறைவு பெற்று வசந்தகாலம் ஆரம்பமாக உள்ளது. ஆனால் பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வரும் வார இறுதியிலிருந்து கன மழை பெய்யவுள்ளதாகவும், சில பகுதிகளில்  கடந்த வாரத்திற்கு அப்படியே நேர்மாறாக வெப்பநிலை 15 டிகிரி செல்சியசாக மாற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து சஹாரா பாலைவனத்தின்  கடுமையான தூசி காற்று இந்த வார கடைசியில் வீசும் என்று பிரிட்டன் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சஹாரா தூசி மேகங்களின் பிரச்சினைகள் ஏற்பட்டு  மக்கள் அபாய நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |