Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. இத நம்பி யாரும் ஏமாற வேண்டாம்…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…..!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக, 76 பேருக்கு, போலி பணி ஆணை வழங்கி, லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். திருத்தணி அடுத்த அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இவர் பேஸ்புக் ஐடி மூலமாக அரசு வேலை காலியிடம் இருப்பதாக அறிந்தார். இதையடுத்து, அந்த பேஸ்புக் உரிமையாளரின், தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவரிடம் பேசியுள்ளார்.

அப்போது அவர், உங்களுக்கு சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருகிறோன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு முதல்கட்டமாக 54 ஆயிரத்து 350, தனது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதன்படி வெங்கடாசலம், அவரது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார். ஆனால், வேலை கிடைக்கவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால், அந்த பேஸ்புக், போலியானது என தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து திருவள்ளுர் எஸ்பி வரன்குமாரிடம், நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார், மர்மநபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், சென்னை மேடவாக்கம் சேர்ந்த பாலாஜி என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நேற்று அவரது வீட்டுக்கு சென்று, பாலாஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அதில், கடந்த 2019ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் சென்னை தெற்கு ரயில்வே, இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் அரசு வேலை வாங்கி தருவதாக போலியான பணி ஆணைகளை வழங்கி, பலரிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளார் என தெரிந்தது.அவரிடம் இருந்து போலியான பணி ஆணைகள், முத்திரைகள், 2 செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |