Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே பாருங்க…. ஜியோ வழங்கும் இலவச வெல்கம் ஆஃபர்…. பெறுவது எப்படி? முழு விவரம் இதோ….!!!!

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ இந்தியாவில் உள்ள டெல்லி, என்சிஆர், சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி உள்ளிட்ட 8  இடங்களில் 5ஜி  சேவை முகேஷ் அம்பானி தலைமையில் அறிமுகம்  செய்தனர். இந்த சேவையில் எந்த கட்டண அமைப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால் பீட்டா எனப்படும் பரிசோதனை நிலையிலேயே இருக்கும் 5ஜி  சேவை இலவசமாக பெற ஜியோ நிறுவனமே சில வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. 5ஜி சேவையை பெற தகுதியான பயனாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வெல்கம் ஆஃபர் என்ற முறையில் பரிசோதித்து வருகிறது.  இந்த 5ஜி சேவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் வாழும் தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இலவச திட்டத்தின் கீழ் பயனாளர்கள் இணைய பயிற்சி சேவையை 1 ஜிபிபீஎஸ் வேகத்துக்கு பயன்படுத்தலாம். இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதில் ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று  முன்பதிவு செய்ய வேண்டும்.  அவர்களுக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அது என்னவென்றால் ஜியோ 5 ஜி கம்பாடிபிள்  செல்லிடப் பேசியை வைத்திருக்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே நெட்வொர்க் கவரேஜ் இருக்கும் இடத்தில் வசித்து வர வேண்டும். இந்நிலையில் 239 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்டு  அல்லது போஸ்டு பெய்டு திட்டத்தை பயன்படுத்தி இருக்க வேண்டும். இந்த தகுதிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே அவர்கள் இந்த ஆஃபருக்கு முன்பதிவு செய்யலாம். மேலும் ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று எக்ஸ்பிரஸ் இன்ட்ரஸ்ட் என்பதை அழுத்தி உங்கள் செல்லிடப்பேசி ஜியோ எண்ணை பதிவிடவும். பின்னர் ஓடிபி வரும் அதை உள்ளிட வேண்டும். இவற்றை செய்தால் உங்கள் முன்பதிவு நிறைவு வரும். இதனையடுத்து நீங்கள் தகுதி வாய்ந்த வாடிக்கையாளராக இருந்தால் வெல்கம் ஆஃபர் பெற உங்களுக்கு அழைப்பு வரும்.

Categories

Tech |