டாடா நிறுவனம் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
டாட்டா நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தை முதல் முதலில் தொடங்கியவர் jamshedji TATA . இவர் Ratan TATA-வின் தாத்தா ஆவார் . மேலும் ratan TATA அவர்கள் கடந்து 2018-ஆம் ஆண்டு வரைக்கும் சேர்மேனாக இருந்தார். தற்போது TATA steel நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவர்களுடைய capacity 27.5 மில்லியன் டன் என்று கருதப்படுகிறது. இவர்கள் 26 -க்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவனங்கள் அமைத்துள்ளனர். தற்போது டியாகோ என்ற புதிய வகை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த கார் சார்ஜ் 315 கிலோமீட்டர் வரை நிற்கும் திறன் கொண்டது.
மேலும் 4 சார்ஜிங் உபாயத்துடனும், இரண்டு டிரைவ் மோட்களுடனும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் வாங்க வரும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் 8 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு காரில் ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தால் அதற்கு 7,500 ரூபாய் செலவாகும். ஆனால் இந்த காரில் 1,100 ரூபாய் மட்டுமே செலவாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.