Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. ஸ்மார்ட்போன் பரிசு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சியில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ரூ.50,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜ்கோட்டில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதி வரை இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என்று ராஜ்கோட் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறிய அவர், ராஜ்கோட் நகராட்சி சுகாதார மையங்களில் சார்பில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் 10-ஆம் தேதி வரை எந்த சுகாதாரத்தில் அதிக எண்ணிக்கையான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |