நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் அனைவரையும் வங்கி சேவைகள் கொண்டுவரும் நோக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் ஜன்தன் கணக்கு தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இந்த கணக்குகளில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவிகள் நேரடியாக வரவு வைக்கின்றன. 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் கூட இந்த கணக்கு தொடங்கலாம். இந்த கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி செலுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் உங்களின் ஜன் தன் கணக்கில் தொகை இல்லாவிட்டாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படாது. ஏனென்றால் இந்த கணக்கு தொடங்குபவர்களுக்கு இலவசமாக ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு ஆகியவை வழங்கப்படுகிறது.
அதன்மூலமாக ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஷாப்பிங் செய்வதற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கு வைத்திருப்போர் 10 ஆயிரம் ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் வசதியையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜன்தன் கணக்கு வைத்திருப்போருக்கு அரசு திட்டங்களின் பயன்கள் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் எல்லா வங்கிகளிலும் ஜன்தன் கணக்கு தொடங்கி மக்கள் பயன்படுத்தலாம்.