Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…. மாநில அரசின் புதிய கட்டுப்பாடுகள்…!!!!

கொரோனா  பரவல் காரணமாக திரிபுராவில் இன்று முதல்  புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின்  காரணமாக தேவைப்பட்டால் ஊரடங்கு  கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில் தற்போது திரிபுராவில் நாளுக்கு நாள் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு  கட்டுப்பாடுகளை  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இன்று முதல் 20 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தபடுகிறது.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு பின்பற்றப்படும். மேலும் உணவகங்கள், திரையரங்கில், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், மற்றும் பொழுதுபோக்கு பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கு 50 % மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் இடைவெளி முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |