தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நோய்தொற்று வேகம் எடுத்துள்ளது. அதனால் நோய்த்தொற்று கட்டுப்படுத்த பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றுகளை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும். சென்னையில் கொரோனா பரிசோதனை 5000 ரூபாயாக உயர்த்த வேண்டும். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சுகாதார பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.