Categories
உலக செய்திகள்

மக்களே…. இனி பொது இடங்களுக்கு செல்ல…. NHS பாஸ் கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோரோனா பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்கள் தடுப்பூசி செலுத்தி வருவதால், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. அதனால் அரசு ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து, மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து பிரிட்டனிலும் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், பொது இடங்களுக்கு செல்ல கொரோனா பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியத்தை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பிரிட்டன் அரசு தடுப்பூசி செலுத்துமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நைட் கிளப்புகள், 500 பேருக்கும் அதிகமானவர்கள் கூடும் அரங்குகள், 400 பேருக்கு அதிகமான கூட்டத்தை கொண்ட வெளியரங்குகளுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழை உறுதிசெய்யும் என் NHS பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், நாடக அரங்குகள் போன்ற பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |