Categories
உலக செய்திகள்

மக்களே…! இனி “தடுப்பூசி பாஸ்” கட்டாயம்…. பிரபல நாடு திட்டவட்டம்…. அங்கீகரித்த அரசியலமைப்பு சபை….!!

பிரான்ஸில் உணவகங்கள் உட்பட பொது இடங்களுக்கு செல்லும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக கொரோனா தொடர்பான தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை அந்நாட்டின் அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

பிரான்சில் வருகின்ற திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள கொரோனா தொடர்பான தடுப்பூசி பாஸ்ஸை அந்நாட்டின் அரசமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

அதன்படி உணவகங்கள் உட்பட பொது இடங்களுக்கு செல்லும் 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான பாஸ்ஸை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அரசியல் தொடர்புடைய எந்தவித கூட்டத்திலும் கலந்து கொள்ள தடுப்பூசி பாஸ் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விதி தேவையில்லை என்று கருதப்படும் பட்சத்தில் அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அந்நாட்டின் அரசியலமைப்பு சபை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |