Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி சிலிண்டர் மானியம் அதிகம் கிடைக்கும்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மக்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிலிண்டரின் விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் நிதி சுமையை குறைக்கும் வகையில் மத்திய அரசிடம் இருந்து சிலிண்டருக்கான மானியமும் வழங்கப்படுகிறது.

இந்த மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளிகள் முதலில் சிலிண்டருக்கான முழு தொகையையும் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும். அதன் பிறகு அதிலிருந்து மானியத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வந்து சேரும். 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்க விரும்பினால் வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் வாங்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

பொதுவாக சீடர்களுக்கான மானியத்தொகை ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடும். பெரும்பாலானோருக்கு 37 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக சிலிண்டர் மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.அதன் பிறகு மீண்டும் மானியம் வழங்கப்பட்ட நிலையில் பலருக்கும் மானியம் வந்து சேரவில்லை எனவும் மானிய தொகை குறைக்கப்பட்டு விட்டதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனிடையே கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.ஆனால் இந்த மானியம் ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.அதாவது உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.குறிப்பாக வருடத்தில் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே 200 ரூபாய் மானியம் கிடைக்கும்.இந்நிலையில் சிலிண்டருக்கான மானியத் திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதலாக 30 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |