Categories
பல்சுவை

மக்களே…. இனி ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தால் போதும்…. சிலிண்டர் உங்க வீடு தேடி வரும்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மிகவும் பின்தங்கிய சில பகுதிகளில் இன்னமும் விறகு அடுப்புதான் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசு இலவச சிலிண்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமையல் சிலிண்டர்களுக்கு அரசிடமிருந்து மானிய உதவியும் கிடைக்கிறது. அதனால் அதிக பேர் புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்குகின்றனர். அதன்படி நீங்கள் புதிய சிலிண்டர் இணைப்பு வாங்க விரும்பினால், எங்கும் அலையத் தேவையில்லை. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருந்துகொண்டே சிலிண்டர் வாங்கலாம். அதற்கு ஒரே ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தால் போதும்.

சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும். நீங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் சிலிண்டர் வாங்க விரும்பினால் 8454955555 என்ற நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தால் போதும். சிலிண்டர் இணைப்பு வீடு தேடி வரும். ஏற்கனவே சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்களும் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து மேற்கூறிய மொபைல் நம்பருக்கு அழைத்து சிலிண்டர் புக்கிங் செய்யலாம். அதனைப்போலவே வாடிக்கையாளர்கள் பெரிய சிலிண்டருக்கு பதிலாக ஐந்து கிலோ எடை கொண்ட குட்டி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். சிலிண்டர் புக்கிங் செய்ய வாட்ஸ் அப் மற்றும் மொபைல் ஆப் போன்ற பல்வேறு வசதிகள் இருந்தாலும் மிஸ்டு கால் வசதி மிகவும் எளிதாக உள்ளது.

Categories

Tech |