அனைத்து மக்களும் ஏசியில் செல்லும் வகையில் புதிய திட்டத்திற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டது.
தென்னக ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கி வருகிறது. இதனை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில்களில் உள்ள ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் ஏசி வகுப்பு பெட்டிகள் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் ரயில்வே ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதாவது ஏசி 3 டயர் எகனாமி என்ற திட்டத்தின் மூலம் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு ஆர்டிஓ மூலம் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயணம் செய்பவர்களுக்கு வழக்கமாக உள்ள கட்டணத்தைவிட எட்டு சதவிகிதம் குறைவாக செலுத்தினால் போதுமானதாகும். இந்தப் பெட்டிகளில் 83 படுக்கைகள் இருக்கும் மேலும் ஏசி வசதி, பயணிகள் படிக்கும் வகையில் பிரத்தியேக வெளிச்சம்,சார்ச்சிங் பாயிண்டுகள், புதுமையான ஏணிகள் என பல்வேறு திட்டங்கள் இதில் அடக்கமாகும். மேலும் படுக்கைகள் அனைத்தும் நெருப்பால் பாதிக்கப்படாத வண்ணம் செய்யப்பட்டுள்ளதாகவும், நொறுக்குத்தீனிகள் உண்பதற்கு மடக்கும் வகையிலான மேசைகள் போன்ற பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவின் முக்கிய வழித்தடங்களில் தலா மூன்று பெட்டிகள் இவ்வாறு இருக்குமாறு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் 800 பெட்டிகள் தயாரித்து அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்து பேசிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஏசி 3 டயர் பெட்டிகள் போதிய அளவில் தயாரிக்கப்பட்ட உடன் சோதனை ஓட்டம் நடைபெறும் என கூறினார். மேலும் இந்தப் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கும் குறைந்தது 18 பெட்டிகள் தேவைப்படுகின்றன. அதனை மட்டுமே வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.