பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி ஜெயந்தியன்று நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த சட்டம் நடைமுறையில் இல்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது.
இந்நிலையில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் புகைபிடித்து உயிரிழக்கின்றனர். மேலும் 12 லட்சம் பேர் பிறர் பிடித்து விடும் புகையை சுவாசிப்பதால் இறக்கின்றனர் . இந்நிலையில் யாரோ புகைப்பதை சுவாசிப்பதால் எந்த தவறும் இழைக்காத பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதனை தடுத்த பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மத்திய,மாநில அரசுகள் காந்தி பிறந்த நாளிலிருந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.