இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார்கார்டு ஆகும். ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெறமுடிகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு சேவைகளை பெற ஆதார்கார்டு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக அனைவரும் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார்கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய இனி வங்கிக்கோ, தலைமை தபால் நிலையங்களுக்கோ செல்ல வேண்டிய தேவையில்லை. ஏனெனில் உங்கள் ஊரில் உள்ள தபால் நிலையத்தின் கிளைகளுக்குச் சென்றே ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம். அதுமட்டுமின்றி மக்கள் ஆர்டி டெபாசிட், சுகன்யா சம்ரிதி யோஜனா டெபாசிட் போன்ற திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளவும், ஜிடிஎஸ் வாயிலாக ஆதார் கார்டை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.