Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இத சீக்கிரமா செஞ்சு முடிங்க… மார்ச்-31 தான் கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு…!!!

பணம் தொடர்பான இந்த ஐந்து விஷயங்களுக்கு காலக்கேடு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

பணப் பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களை கண்காணிக்க பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை  சம்பந்தப்பட்ட ஆதார் கார்டுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும்.

நடப்பு நிதியாண்டில் உங்களுக்கான அனைத்து வரி சேமிப்பு முதலீடுகளுக்கான விவரங்களையும் சரி பார்த்து கொள்ளுங்கள். ஏதாவது முதலீடு செய்ய மறந்து இருந்தால் அதை மார்ச் மாத இறுதிக்குள் செய்து முடிக்கலாம். இந்த நிதியாண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதம் அவகாசம் கூட இல்லை. சம்பளம் பெறும் முதலீட்டாளர்களுக்கு வருமான வரி சட்டம் பிரிவு80-சியின் கீழ் வரிச் சலுகை கிடைக் கிறது. இதன் மூலமாக ரூபாய் 1.5லட்சம் வரையில் மிச்சப்படுத்தலாம்.

மேலும் இந்த ஆண்டின் மத்தியில் சம்பளம் பெறும் ஊழியர்கள் வேறொரு புதிய நிறுவனத்தில் இணைந்து இருந்தால் அவர்கள் வருமான வரியின் 12 பி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் வருமானம் தொடர்பான விபரங்களை வழங்க வேண்டும். இதற்கான காலக்கெடு  மார்ச் 31 வரை. 2020-21 நிதி ஆண்டிற்கான தாமதித்த வருமான வரி ரிட்டன் தாக்கல் கடைசி நாள் மார்ச் 31.

எனவே நீங்கள் தேதி தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் இந்த கால கெடுக்குள்  தாக்கல் செய்வது மிகவும் நல்லது. வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளும் முறை சரிபார்ப்புக் உட்படாத வாடிக்கையாளர்கள் இந்த மாதமே  அதை முடித்து விட வேண்டும். இதற்கான கால அவகாசம் 2021 டிசம்பர் 31 வரை தான் முதலில் இருந்தது. அதன் பின் மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |