ஒவ்வொரும் தங்களுடைய வீட்டில் அன்றாடம் சேரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைத்தொட்டி வைத்தாலும் பொதுமக்கள் அந்த குப்பைத் தொட்டியில் சென்று குப்பைகளை போடாமல் வீதிகளில் குப்பைகளை போட்டு விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள், பல நோய் தொற்றுகள் உருவாகும் அபாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் எடுத்து புகார் அளிப்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேலூர் மாநகராட்சி இருபத்தி ஏழாவது வார்டில் இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டினால் அவர்களுக்கு ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.