தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பிஏ5 என்ற ஓமிக்ரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் முக கவசம் மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை தொடர்ந்து செய்தால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.