Categories
தேசிய செய்திகள்

மக்களே…. ஆர்டர் பண்ணா வீடு தேடி வரும் தேசியக்கொடி….. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடி என்ற பிரசாதம் மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் வகையில் இந்திய தபால் துறை மூலமாக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாட்டு மக்கள் அனைவரும் இந்தியா போஸ்ட் வெப்சைட் மூலமாக தேசிய கொடியை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். அவ்வாறு ஆர்டர் செய்யும் தேசியக்கொடி வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். இந்தியா போஸ்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் இந்த தேசிய கொடியின் விலை 25 ரூபாய் மட்டுமே. இதனை வாங்குவதற்கு முதலில் https://www.epostoffice.gov.in/ProductDetails/Guest_productDetails?Prodid=ca6wTEVyMuWlqlgDBTtyTw== என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

பிறகு மொபைல் நம்பரை பதிவிட்டு அதற்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டு கொடியை ஆர்டர் செய்து வாங்கும் ஆப்ஷன் வழங்கலாம். அதில் உங்களுடைய மாநிலம் மற்றும் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். எத்தனை கொடிகள் தேவை என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக தேசியக்கொடிக்கான பணத்தை செலுத்தும் வசதியும் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே தேசியக்கொடி அனுப்பி வைக்கப்படும். இதற்கு டெலிவரி கட்டணம் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |