தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து 11ஆம் தேதி வரை தமிழகம் அருகே வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.