தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து வருவதாகவும், அதோடு கோவை, திருப்பூர், நீலகிரி எல்லைப்பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அதோடு தமிழகத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாகவும் மூன்றாம் அலை முதியவர்களை தான் பாதிக்கும் என்பதால் இளைஞர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் எனவும் அவர் கூறினார். அதோடு முதியவர்கள் சற்று பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.