Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்….. 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….!!

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை உட்பட 10 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஓமலூர் 10 சென்டிமீட்டர், சோளிங்கர் 8, விழுப்புரம், வட புதுப்பட்டு, ஏற்காட்டில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது..

Categories

Tech |