மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. சியான், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அளவு தேங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில வழித்தடங்களில் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மும்பை மற்றும் அதன் புறநகர பகுதியில் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மும்பையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை நிலவரம் குறித்து தலைமை செயலாளர் மனுகுமார் ஸ்ரீவதஸ்தாவுடன் கலந்துரையாடினார். மேலும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.