தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் 350 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது, டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதித்தவர்களில் 84% பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று 4000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொற்று உறுதியாகும் விகிதம் 6.5% உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.