ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது அந்நிறுவனம் கட்டணத்தை உயர்த்தி வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் , கட்டணத்தை உயர்த்தக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு 3 அல்லது 4 மாதங்களிலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவடிக்கையாளர்களிடம் இருந்தும் நிறுவனம் பெறுவதற்கான நிர்ணயித்துள்ள சராசரி வருவாய் இலக்கு (ஏஆர்பியூ) வழக்கு அக்டோபர்- டிசம்பர் காலகட்டத்தில் ரூ 163 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இதை ரூ 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.