திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருவதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 7 முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் இ- பாஸ் பெற வேண்டும்.
அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கும்.கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 10 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in என்ற இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம் ஆகியவற்றை தேர்வுசெய்து இ- பாஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.