பிரான்ஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு பதிலாக மற்றொரு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது அஸ்ட்ராஜெனேகாக்கு பதிலாக மற்றொரு தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில் முதல் டோஸ் அஸ்ட்ராஜெனேகா போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மூளையில் ரத்த உறைவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்ற அச்சத்தின் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை ஜெர்மனி முதலில் ஆலோசனை வழங்கியது பிறகு பிரான்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.