டெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்டகாலமாக காத்திருந்தனர். அவர்களின் எண்ணத்தை பிரதமர் மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. மேலும் கடந்த 21 அரசுகள் தங்கள் வாக்கு வங்கிகளை மனதில் வைத்து முடிவுகளை எடுத்து உள்ளன.
ஆனால் மோடி அரசு வாக்கு வங்கிக்காக ஒருபோதும் மக்களுக்கு நல்லது போல தோன்றும் முடிவுகளை எடுத்தது இல்லை. மக்களுக்கு பயன்தரும் முடிவுகளை மட்டுமே மோடி அரசு எப்போதும் எடுத்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நல்ல நிர்வாகத்தை நடத்தி வருகிறார் என்று நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.
இது இந்தியாவின் முகத்தையே மாற்றியுள்ளது. மோடி ஆட்சி மீது கடந்த 7 ஆண்டுகளில் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. வெளிப்படையான நிர்வாகத்தை மோடி அரசு வழங்கி வருகிறது. அரசாங்கம் மீது மக்களும் மக்கள் மீது அரசாங்கத்திற்கும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்று அமித்ஷா அவர் கூறியுள்ளார்.