Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. தங்கம் விலை உயரப் போகுது?…. திடீரென வரியை உயர்த்திய மத்திய அரசு….!!!!

தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு 10.75 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவாணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் அதன் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி தற்போது 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த சுங்க வரி 12.5 சதவீதமாக இருக்கும்.

அதன் மூலம் தங்கம் விலை மேலும் உயர அதிக வாய்ப்புள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |