Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. சிமெண்ட் விலை அதிரடி உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனாவின் முழு ஊரடங்கிற்கு முன்பு, ஒரு மூட்டை சிமென்ட் 370 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் எம் – சாண்ட் ஒரு யூனிட், 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மேலும் ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக, உற்பத்திச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதால், வேறு வழியின்றி இந்த விலை உயர்வை விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தரப்பில்  தெரிவித்துள்ளதாக  கிரிசில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததன் காரணமாக ஒரு மூட்டை சிமெண்ட் உற்பத்தி செய்ய ₹60 முதல் ₹70 வரை செலவு அதிகரித்துள்ளதாக, சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் 8 % முதல் 10 % வரை அதிகரித்து, ஒரு மூட்டை சிமெண்ட் விலை ₹400 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிமெண்டின் விலை உயர்வால் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமானங்களின்  விலை உயரும் சூழலானது ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |