கொரோனா நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில அரசு முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் வருகின்ற நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. நாட்டின் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், தீபாவளி பண்டிகையை மிக பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அம்மாநில அரசு முழுமையாக தடை விதித்துள்ளது.
அந்த அறிவிப்பை சிக்கிம் மாநில தலைமைச் செயலாளர் குப்தா, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தாலும், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு காற்று மாசு அதிகரிக்கும் பட்சத்தில் கடும் சிரமம் ஏற்படும் என்பதால், பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.