Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களின் அனுதாபம்…. பவானி ரெட்டி அப்பட்டமா நடிக்கிறாங்க…. பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து ஐந்தாவது சீசன் இம்மாதம் 3ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. அவர்களில் ஒருவரான பவானி தனது வாழ்க்கையை பற்றி கூறுகையில் தனது கணவரின் இறப்பு பற்றியும் அதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் உருக்கமாக பேசியிருந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதனிடையே சமூகவலைதளத்தில் பவானி ரெட்டி தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய்  என்பவரை காதலித்து திருமணம் செய்ய இருந்ததாகவும் ஆனால் அதற்குள் அவர்கள் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆனந்த் ஜாய் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் பவானிக்கு ஆதரவு கொடுக்குமாறும், வாழ்க்கையில் பல கஷ்டங்களை அவர் அனுபவித்து உள்ளதாகவும், எனக்கு சிறந்த தோழி மட்டுமல்ல அதற்கும் ஒரு படி மேல் என்று கூறியுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் பிரியவில்லை நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பவானி மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக அதிகம் நடிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |