மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறுவதில் எனக்கு விருப்பமில்லை என அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சன் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் இறுதி சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் ரிஷி சுனக் பிரபலமான ஒரு செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். அவர் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறுவதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு பொய்யான வாக்குறுதலை கூறி வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே மேல். நான் கடினமான குளிர்காலத்தில் மக்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வேன்.
என்னுடைய முதல் விருப்பம் என்னவென்றால் மக்களிடமிருந்து பணத்தை எடுக்கக் கூடாது. பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் கொரோனா பொதுமக்க காலத்தில் என்னுடைய சாதனையை மனதில் வைத்து மக்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். ஏராளமான மக்கள் விலைவாசி உயர்வால் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதில் குறிப்பாக எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்கள் மற்றும் வறுமையில் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவி செய்வேன் என்று கூறியுள்ளார்.