Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மகா சிவராத்திரி” தென்தமிழ்நாடு சேவாபாரதி சார்பாக 1008 சிவ பூஜை…. திரண்டு வந்த மக்கள் கூட்டம்…!!

திசையன்விளை சுயம்புலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பூஜித்து பிராத்தனை செய்வார்கள் . இந்நிலையில் சிவபெருமானுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு இக்கோவிலில்,” தென் தமிழ்நாடு சேவாபாரதி ” சார்பாக சிவலிங்கத்திற்கு 1008 சிவபூஜை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பெண்கள் சிவ சுலோகங்கள் கூறியபடி சுவாமியை தரிசனம் செய்தார்கள் . இதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு நறுமண பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு மட்டுமல்லாமல் சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்துள்ளார்கள்.இந்த கோவிலில் நடைபெற்ற அனைத்து ஏற்பாடுகளையும் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |