Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தேனா…?” எழுந்த புகாருக்கு ரவீந்தர் விளக்கம்….!!!!!!

மகாலட்சுமி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக எழுந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார் ரவீந்தர்.

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் “மகாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் ரவீந்தர்” என இணையத்தில் பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதுப்பற்றி பேட்டி ஒன்றில் ரவீந்தர் கூறியுள்ளதாவது, நான் மகாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு வருடங்களாக காதலித்து வந்தோம். கட்டாய திருமணம் செய்யவில்லை காதல் திருமணம் தான் செய்தோம். இதனிடையே தன் மகனையும் தன்னையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளும் நபருக்காக காத்திருந்தபோது ரவீந்தர் வந்ததாக மகாலட்சுமி கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |