Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகார ராசிக்கு…. எதிரிகள் விலகுவார்கள்… படிப்பில் கவனம்…!!

மகரம் ராசி அன்பர்கள்…!! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து தான் செய்ய வேண்டும். தொழில் பணியாளரிடம் கூடுதல் கவனம் இருக்கட்டும். பயணங்களில் சில மாற்றங்களை இன்று நீங்கள் செய்யக்கூடும். திடீர் கோபங்கள் கொஞ்சம் தலைதூக்கும். நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையுமே சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

வியாபாரிகள் எந்த கொள்முதலையம்  தயக்கமின்றி செய்யலாம். உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். இன்று எதிரிகள் விலகிச்செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தின் போது உங்களுக்கு புதிய நபர்களும் புதிய அனுபவமும் கிடைக்கும். இன்று மாணவர்கள்  கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக எழுந்து நின்று ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியில் நீங்கள் ஈடுபடும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |