Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி…. “குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் வழங்கப்படும்”… பிரதமர் மோடி வேதனை..!!

மகாராஷ்டிரா கார் விபத்தில் பலியான எம்எல்ஏ மகன் உட்பட 7 பேரின் குடும்பத்திற்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் செல்சுரா அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் திரோரா தொகுதி பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகனும், மருத்துவ மாணவருமான அவிஷ்கார் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்கள் வார்தாவுக்குச் சென்று கொண்டிருந்தனர்..

உயிரிழந்தவர்கள் வார்தாவில் உள்ள சவாங்கி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீரஜ் சவுகான், விவேக் நந்தன், பிரத்யுஷ் சிங் மற்றும் ஷுபம் ஜெய்ஸ்வால் ஆகியோர் இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களாகவும், அவிஷ்கர் ரஹாங்டேல் மற்றும் பவன் சக்தி ஆகியோர் முதல் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களாகவும், நித்தேஷ் சிங் மருத்துவப் பயிற்சியாளராகவும் இருந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி மகாராஷ்டிராவில் செல்சுரா அருகே நடந்த விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. இந்த சோக நேரத்தில், என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |