பிரிட்டனில் மகாராணி குறித்து வெளியான மோசமான கார்ட்டூன் காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரெஞ்ச் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ முகமது நபியை பற்றி மோசமான கார்ட்டூன்களை வெளியிட்டது. அதனால் தீவிரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த பத்திரிக்கை மேலும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது அதில் அமெரிக்காவில் வெள்ளையின போலீசார் கருப்பினத்தவர் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் பிரிட்டன் மகாராணி இளவரசர் மனைவியின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்துவது போல் கார்ட்டூனை வெளியிட்டது.
அந்த கார்ட்டூனில் அமைந்த காட்சியானது கருப்பின தாய்க்கு பிறந்த கலப்பினத்தவரான இளவரசி மேகன் கழுத்தில் மகாராணி முழங்காலை வைத்து அழுத்துவது போல் அமைந்துள்ளது. மேலும் இளவரசியிடம் ஏன் அரண்மனையை விட்டு வெளியேறினாய் கேள்வியை கேட்பது போலவும், மூச்சு விட முடியாமல் தான் அரண்மனையை விட்டு வெளியேறினேன் என்ற பதிலை இளவரசி உரைப்பது போலவும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் பிரிட்டன் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனால் அப்பத்திரிக்கையை பலரும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் இதுதான் பத்திரிக்கை சுதந்திரமா என்ற கேள்வியையும் எழுப்பி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பிரிட்டன் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.