தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் ஓடிடி-யில் வெளியாகும் என்ற தகவல் வைரலாக பரவியது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நிச்சயமாக மகான் ஓடிடி-யில் வெளியாகாது திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.