மகாத்மா காந்தியை அவமதித்து , கோட்சேவை புகழ்ந்து பேசியதற்காக துறவி காளிச்சரண் மகாராஜா கைதுசெய்யப்பட்டார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டு நாள் தர்ம சன்சத் முகாமில் பங்கேற்ற காளிசரண் மகாராஜா, ”மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்தார், நாத் ராம் கடவுள் அவரைக் கொன்றார், இந்த காரியத்தை செய்த அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என பேசியுள்ளார். இது பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோவில், இவர் கைது செய்யப்பட்டார்.
ராய்ப்பூர் போலீசார் காளீஸ்வரன் மீது துஷ்பிரயோக விமர்சனம் செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர் . மதவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இன்று காலை கஜுராஹோவில் உள்ள அவரது வீட்டில் இருந்து காளிசரண் கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து மகாராஜா ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவார்.