தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அதனால் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இதில் நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்ற கமல்ஹாசன் பிறந்தநாள் இரவு பார்ட்டியில் கமல்ஹாசன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.அதில் கமல்ஹாசனும் பிந்து மாதவியும் பார்ட்டியில் நடனமாடும் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.