மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள முல்தண்ட் பகுதியில் வசித்து வருபவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் வீட்டில் அப்துல் என்பவர் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்துல் சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தன் முதலாளியின் மகளை அடிக்கடி கேலி செய்து வந்திருக்கிறார். இதை அறிந்த சலீம் ஆத்திரத்தில் அப்துலை ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் அப்துல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் அப்துலின் உடலை வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில் வீசியுள்ளார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில், உயிரிழந்தவர் சலீமின் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த அப்துல் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தனது மகளை அப்துல் அடிக்கடி கிண்டல் செய்ததால் அவரை அடித்து கொன்றதாக அப்துல் குற்றத்தை ஒத்துக் கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.